Asianet News TamilAsianet News Tamil

சசிகலா அதிரடி நீக்கம்! எடப்பாடி அதிரடி சரவெடி! அதிர்ச்சியில் மன்னார்குடி!

Sasikala removal!
Sasikala removal!
Author
First Published Aug 21, 2017, 4:38 PM IST


அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என இரு அணிகள் இணைப்புக்கு பின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார். இதனால் சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெ.விற்கு வழங்கப்பட்ட அனைத்து மரியாதைகளில் சசிகலாவுக்கு சற்றும் குறையவில்லை. ஆனால் தனது முதலமைச்சர்
பதவியை பறிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனி கோஷ்டி ஆரம்பித்தார். 

இதைதொடர்ந்து ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை என கூறி அவருக்கென ஒரு தனி பட்டாளத்தை உருவாக்கினார். இதனால் தொண்டர்கள் மத்தியிலும் அவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.

இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டிடிவி தினகரன் எடப்பாடி பதவியை பிடுங்க முற்பட்டதால் பகை முற்றி கொண்டது. 

இதனால் டிடிவியை விட்டு பிரிந்து எடப்பாடி பன்னீரிடம் ஆதரவு கோரினார். அவரது கோரிக்கைகளையும் நிறைவேற்றினார்.

ஆனால் சசிகலாவை நீக்கினால் மட்டுமே தலைமை கழகம் வருவோம் என தெரிவித்ததால் ஆமைச்சர்களிடம் பேசி எடப்பாடி முடிவெடுத்தார். மேலும் அமைச்சர்களை வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர். இந்த கூட்டத்தின்போது, கட்சி குறித்து சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடியும் பன்னீரும் கைக்குலுக்கி அணிகள் இணைப்பை அறிவித்தனர். 

அணிகள் இணைப்பு விழாவில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க, விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவித்தார். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்தின் இந்த பேச்சால், சசிகலா, டிடிவி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios