பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

தென்மாவட்டங்களில் இரு பிரிவினரிடைய மோதல் ஏற்படும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் மதுரையில் உள்ள தென்மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ்;- விளம்பர நோக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீதும், அச்சகங்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் ஆதரவு தவிர்க்க முடியாதது. வரும் தேர்தலில் கூட்டணி அமைக்கும் கட்சியிடம், எங்கள் கட்சி சார்பில் 2 தொகுதிகள் கேட்கப்படும் என்றார்.

மேலும், பேசிய அவர் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும். ரஜினி ஆன்மிக அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாஸ். ரஜினி ரசிகர்கள் அவர் பிறந்ததில் இருந்து போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். ஆனால், அவர் அரசியலுக்கு வந்தால் தான் சொல்லமுடியும்.தமிழகத்தில் மட்டும் தான் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலையில் எந்த கட்சிக்கும் கொடிபிடிக்க ஒரு கூட்டம் உள்ளது என கருத்து தெரிவத்துள்ளார்.