CBSE 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நாடார்கள் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றை நீக்க வேண்டும் என நாடார் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதேநேரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, இது குறித்து மனித வள மேம்பாட்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் புகார் அளித்தார். சர்ச்சைக்குரி பாடத்தை நீக்க வேண்டும் என்றும் மனு அளித்தார்.

இந்நிலையில் நாடார்கள் குறித்து 9 ம் வகுப்பு பாடத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய பாகத்தை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த பிரச்சனையை கையில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்த சசிகலா புஷ்பா வுக்கு நாடார் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. தென் மாவட்டங்களில் இருந்து சசிகலா புஷ்பா வுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதனிடையே CBSE 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் நாடார்கள் குறித்து இடம் பெற்றிருந்த தகவல்களை நீக்க நடவடிக்கை எடுத்ததற்கு மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாலாவை சந்தித்து சசிகலா புஷ்பா நன்றி தெரிவித்தார்.