Asianet News TamilAsianet News Tamil

கால் இருக்காதுன்னு அமைச்சரை மிரட்டிய சசிகலா புஷ்பா! வீட்டை அடித்து நொறுக்கிய 3 திமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு

தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Sasikala Pushpa house attack.. Case against 3 DMK councillors
Author
First Published Dec 23, 2022, 11:15 AM IST

தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பொது கூட்டம் ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை ஒருமையில் பேசியதோடு, "சூடு, சொரணை இருந்தால், என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம்" என்று மிரட்டல் விடுத்திருந்ததார். 

இதையும் படிங்க;- அண்ணாமலையை ஒருமையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்.. அசராமல் திருப்பி அடிக்கும் நாராயணன் திருப்பதி..!

Sasikala Pushpa house attack.. Case against 3 DMK councillors

அமைச்சர் கீதா ஜீவனுக்கு பதிலடி தரும் வகையில் தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில்  பேசிய சசிகலா புஷ்பா நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது. சமூக நலத்துறை அமைச்சராய் இருந்து நீங்கள் சமூகத்தையும் பேணவில்லை.  திமுக மாவட்ட செயலாளராகிவிட்டதால் தலைகால் புரியாமல் இருக்கிறார். உங்கப்பா பெரிய ரவுடி. அவரையே அடக்கி ஒடுக்கி உட்காரவைத்தோம் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இவரது பேச்சு திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Sasikala Pushpa house attack.. Case against 3 DMK councillors

இந்நிலையில், தூத்துக்குடி தபால் தந்தி நகரில் வசிக்கும் சசிகலா புஷ்பா வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல்  தாக்குதல் நடத்தி கார் கண்ணாடிகளை உடைத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திமுக கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதையும் படிங்க;-  மணல் கொள்ளை தொடர்பாக சுவரொட்டி.! கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவரின் மகன்- தட்டி தூக்கிய போலீஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios