கடந்த  சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து மக்களைவை எம்பி சசிகலா புஷ்பா, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பத்திரிகைகளிலும், டிவி சேனல்களிலும் பேட்டி அளித்து வந்தார்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். ஆனால், அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி காலியாகவே இருந்தது.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்கும்படி ஜெயலலிதாவின் தோழி சசிகாவை, அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்தி, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் சசிகலா, அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.

இதற்கிடையில், சசிகலா புஷ்பா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் சசிகலா பொறுப்பேற்க கூடாது எனவும் கூறிவந்தார். மேலும், சசிகலா புஷ்பா, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று  மாலை வருகிறது. இதனால், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கட்சியை வழி நடத்தவும், ஆட்சியை வழி நடத்தவும் சசிகலா விரைவி முதலமைச்சராக பதவியேற்பார் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.