இது தொடர்பாக எம்.பி. சசிகலா புஷ்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என தமிழகத்தில் ஏராளமான தமிழ் போராளிகள் போர்க்கொடி உயர்த்தினர். குறிப்பாக எங்கே ரஜினிகாந்த் புகழ் பெற்றுவிடுவாரோ என்ற அச்சத்தில் சீமான் ஓவராக பொங்கினாரே! என  கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தமிழர்கள் இன அழிப்பிக்கு மூலகாரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இலங்கையில் சொகுசு, ஆடம்பர பங்களா கட்டியுள்ளாரே, இதை எதிர்த்து எந்த தமிழ் போராளி குரல் கொடுத்தார் எனவும் அவர் கொந்தளித்துள்ளார்.

தற்போது திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் இலங்கையில் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். இதெல்லாம் தமிழகத்தில் தமிழ் போராளிகளின் கண்ணுக்கு தெரியவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினி காந்த்துக்கு ஒரு நீதி… ஜெகத்ரட்சகனுக்கு ஒரு நீதியா ? என கேள்வி எழுப்பியுள்ள சசிகலா புஷ்பா, இவர்கள் எல்லாம் தமிழ் போராளிகள் அல்ல…தமிழ் போலிகள் என அதிரடியாக தெரிவத்துள்ளார்