ஜெ மரணத்தில் மர்மம்…நீதி விசாரணை கோரும் சசிகலா புஷ்பா எம்.பி……

74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.ஜெ வின் மரணம் ஒன்றரைக் கோடி அ.தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சி அடையச்செய்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடத்துள்ளனர்,

ஜெ இறப்பில் உள்ள மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்லப்போவதாக ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்திருந்தார்.

இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. திருமதி சசிகலா புஷ்பா. சென்னையில் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தற்கு பேட்டி அளித்தார்.

அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஜெவுக்கு உண்மையிலேயே நடந்தது என்ன?..

தமிழகத்தில் உள்ள பொது மக்கள் இதை தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்று தெரிவித்தார்.