உலகத் தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில், உலகத் தமிழர்கள் அனைவரும் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும், உவகையுடனும் கொண்டாடி மகிழும் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் தனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

பொங்கல் பொங்கட்டும், தமிழர்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி தங்கட்டும் அதைத் கண்டு இந்த நாடே மகிழட்டும் என்று மனமார வாழ்த்தி, தன் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கி மகிழ்வதாகவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.