அண்மையில் காலமான சசிகலாவின் கணவர் நடராஜனின் உருவப்படத்தை திறக்கும் நிகழ்ச்சியை சசிகலாவின் குடும்பத்தினர் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் மறைந்த ம.நடராஜனின் உருவப்படத்தை திறக்கும் நிகழ்ச்சியை நடத்த சசிகலாவின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். நடராஜன் மரணமடைந்ததை அடுத்து
சிறையில் இருந்த சசிகலாவு 15 நாக்ள் பரோலில் வெளியே வந்துள்ளார். தற்பது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். 

நடராஜனின் உருவச்சிலையை திறக்க வேண்டும் என்ற எண்ணம் சசிகலாவுக்கு உள்ளதாம். ஒவ்வொரு வருடமும் நடராஜன் பொங்கல் விழாவை நடத்தும் தஞ்சை தமிழரசி மண்டபத்திலேயே இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளாராம். 

நடராஜன் படத்திறப்பு விழா வரும் 30 ஆம் தேதி அன்று நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக, பாஜக கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, அவர்களை இதில் பங்குபெற வைக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளாராம். தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

நிகழ்ச்சிக்கு, வைகோ, சீமான், திருமாவளவன், நெடுமாறன் உள்ளிட்ட பலருக்கு தினகரனே தொலைபேசியில் பேசி அவர்களின் வருகையை உறுதி செய்கிறாராம்.
மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படும் எனவும், நிகழ்ச்சிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை உறுதி செய்த பின்பே அழைப்பிதழில் அவர்களின் பெயர்
அச்சடிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

நடராஜன் படத்திறப்பு விழா என்றாலும் இந்த நிகழ்ச்சி மூலம், மற்ற கட்சிகள் தங்களுடன் இணக்கமாக இருக்கின்றனர் என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்று
சசிகலாவும், தினகரனும் கருதுவதாக தெரிகிறது. 

சசிகலா பரோலில் வெளிவந்த நிலையில், பொது நிகழ்ச்சியில் பங்குகொள்ளக் கூடாது என நிபந்தனை விதிததது சிறைத்துறை. இந்த நிலையில் ம.நடராஜன் படதிறப்பு விழா
குடும்ப விழாவாக இருந்தாலும், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும்போது அது பொது நிகழ்ச்சியாக மாறிவிடும். இதனால், படத்திறப்பு விழாவில் சசிகலா
பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.