அதிமுகவில் அடுத்து என்ன என்ற கேள்விதான் கடந்த 17 நாட்களாக அனைவர் மனதிலும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை முதன்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
அதில் சசிகலாவுக்கு ஆதரவாக அவர் பொது செயலாளர் ஆக வேண்டும், என ஒருமித்த முடிவு எடுக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து வரும் 29ஆம் தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக அதிமுக பொதுக்குழு, செயற்குழுவை கூட்டும் சென்னை வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்திற்கு அதிமுக சார்பில் புக் செய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து அங்கு 29தேதி கூட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாறுபட்ட கருத்துடன் இருந்த கே.பி.முனுசாமி பி.எச்.பாண்டியன் ஆகியோரையும் சின்னம்மா தரப்பில் சரிகட்டி விட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகளை பொறுத்தவரை எந்த தடையும் இல்லை என்பதால் வரும் 29 தேதி செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி உட்கட்சி சட்ட திட்டங்களில் சில தளர்வுகளை மேற்கொள்கின்றனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சின்னம்மா சசிகலாவை அதிமுகவின் பொது செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கின்றனர்.
