வி.என்.சுதாகரன் இவரை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஜெவின் தோழி சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் 3 ஆவது மகன். இதைவிட அவரது மிகப்பெரிய அடையாளம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்…

இவருக்கும் சிவாஜியின் பேத்தியும், நடிகர் பிரபு,ராம்குமார் ஆகியோரின் சகோதரி சாந்தியின் மகளுமான சத்யலட்சுமிக்கும்தான் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்சேறு காரணங்களால் ஜெயலலிதாவிற்கும் சுதாகரனுக்கும் இடையே பெரிய  அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கஞ்சா வைத்திருந்ததாக ஒரு முறை சுதாகரன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சுதாகரனுக்கு வனவாசம் தான். அவரால் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் செல்ல முடியவில்லை. அவர் மட்டுமல்ல அவரது சொந்த பந்தங்கள் கூட ஜெயலலிதாவுடன் ஒட்டி உறவாட முடியவில்லை. ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெறும்போது கூட சுதாகரன் அங்கு செல்ல முடியவில்லை.

தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின் சம்பந்தி வீட்டாரை சாவகாசமாக சந்தித்துள்ளார் சசிகலா. பிரபு,ராம்குமார்,துஷ்யந்த் மற்றும் சசிகலாவின் சம்பந்தி குடும்பத்தினர் போயஸ் தோட்டத்தில் சந்தித்து தங்களது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்தனர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கூடிவராத சொந்தம் அவர் இறந்த பிறகு கூடிவந்துள்ளது.