Asianet News TamilAsianet News Tamil

சசிகலா விடுதலை இப்போதைக்கு இல்லை... லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கல்..!


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள, அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் ஆகஸ்ட் மாதம் விடுதலையாக வாய்ப்புள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை எனக் கூறப்படுகிறது.

Sasikala Liberation is out of the question right now ... problem in ACP
Author
Tamil Nadu, First Published Jun 26, 2020, 1:31 PM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள, அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் ஆகஸ்ட் மாதம் விடுதலையாக வாய்ப்புள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை எனக் கூறப்படுகிறது.Sasikala Liberation is out of the question right now ... problem in ACP

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆசீர்வாதம் ஆச்சாரி, “சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வரும் ஆகஸ்ட் 14, 2020 அன்று விடுதலையாக வாய்ப்புள்ளது. மேலும் அப்டேட்களுக்குக் காத்திருக்கவும், ” என்று ஒரு பகீர் தகவலை வெளியிட்டார். 

இதனால் அரசியல் களத்தில் சசிகலாவின் விடுதலை குறித்து பரபரக்கப்பட்டு வருகிறது. அமமுக தரப்போ, சசிகலாவுக்கு நெருக்கமான டி.டி.வி.தினகரன் தரப்போ இதுவரை அவரின் விடுதலை குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் பாஜக தரப்பைச் சேர்ந்த ஒருவர் சசிகலா விடுதலை பற்றி பகிரங்கத் தகவலை வெளியிட்டதும் சர்ச்சையாகியுள்ளது. Sasikala Liberation is out of the question right now ... problem in ACP

இது குறித்து பிரபல அரசியல் நோக்கர் சுமந்த் ராமன், “எப்படி உங்களுக்கு விடுதலையாகப் போகும் தேதி உறுதியாக தெரிகிறது சார்? அவரின் விடுதலையில் உங்களுக்கு ஏதேனும் அரசியல் ரீதியிலான சாதகம் உள்ளதா?” என்று ஆச்சாரியின் ட்விட்டர் பதிவிற்குக் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். 

பெங்களூரு நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தன் கணவரான நடராஜன் உயிரிழந்தபோது சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்திருந்தார் சசிகலா. பின்னர் அவர் மீண்டும் சிறையிலேயே அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனைக் காலம் விதிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் தண்டனை முடிய நாட்கள் இருக்கும் நிலையில், நன்னடத்தைக் காரணமாக சசிகலா சீக்கிரமே விடுதலை செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர் எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து பெங்களூரு சிறைத் துறை தகவல் சொல்ல மறுத்து வருகிறது. இப்படியான சூழலில்தான் ஆசீர்வாதம் ஆச்சாரியின் தகவல் வந்துள்ளது. ஆனால் சசிகலா சிறையில் சொகுசாக இருப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ரூபா ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் சசிகலா தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்கவில்லை. Sasikala Liberation is out of the question right now ... problem in ACP

சசிகலா, இளவரசி மற்றும் ஸ்ரீ சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு 10 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அத்துடன்  அவர்கள் மீதான லஞ்ச புகார் விசாரணை நீதிமன்றத்தில்  உள்ளது. அதில் தங்களை நிரூபித்தால் பிப்ரவரி 2021 க்குள் விடுவிக்கப்படுவார்கள். இல்லையெனில் அவர்கள் பிப்ரவரி 2022 க்குள் விடுவிக்கப்படுவார்கள். ஆகஸ்ட் மாதம் அவர்கள் ரிலீசாக வாய்ப்பில்லை எனத் தெரிய வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios