இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை தேவை என அதிமுக சட்டமன்ற குழுத்தலைவர் சசிகலா பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து பிரதமருக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள 35 தமிழக மீனவர்களையும், 120 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை என குறிபிட்டுள்ளார்.

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு கோளாறு காரணமாக நடுகடலில் நின்றதாகவும், அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10 தமிழக மீனவர்களுடன் சேர்த்து படகுகளையும் சிறைபிடித்து சென்றதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளுக்கு முரணாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.