ஜெயலலிதாவில் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் எந்த ஒரு விதிமுறையையும் மீறவில்லை என அவரது வழக்கறிஞர் அசோகன் பேட்டியளித்துள்ளார். 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். இதனை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் து கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டி இருந்தார். 

அதே போல் அவர் ஷாப்பிங் சென்றுவிட்டு வெளியே சிறைக்குள் வந்த வீடியோவையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று பேட்டியளித்த சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் இதனை திட்டவட்டமாக மறுத்தார்.

ரூபா ஐபிஎஸ் கூறிய அனைத்தும் பொய் என்றும் சசிகலா வெளியில் செல்லவில்லை.சாதாரண சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. எந்தவிதமான சொந்த ஆடைகளையும் அணியலாம். அவர் கொண்டு வந்த பைகளில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மட்டுமே இருந்தன என்று அவர் மறுத்துள்ளார்.