sasikala is not my sister but she is my ex sister said divakaran

சசிகலா எனக்கு சகோதரி அல்ல.. முன்னாள் சகோதரி...தினகரனை காயவிட்ட திவாகரன்..!

இரண்டு நாட்களுக்கு முன்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்

அதில் சசிகலா புகை படத்தையோ அல்லது அவரது பெயரையோ எங்கும் பயன்படுத்தக் கூடாது எண்டும்,

ஊடகங்களுக்கு அளிக்கப்படும் பேட்டியில் தன்னை சகோதரி என கூறக்கூடாது என்றும் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவின் தம்பி திவாகரன், இனி தனது கட்சியில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்,

அதே போன்று,சசிகலா எனக்கு சகோதரி அல்ல முன்னாள் சகோதரி ன்றும் தெரிவித்து உள்ளார்

தினகரனை பற்றி பேசும் போது

ஒபிஎஸ் கும் சசிகலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தியவர் தினகரன்.

ஒரு தரப்பு கருத்தை மட்டும் கேட்டு சசிகலா இந்த முடிவை எடுத்து உள்ளார்.

அரசியல் பயணத்தில் ஜெயலலிதா மற்றும் எம் ஜி ஆர் படத்தை பயன்படுத்துவோம்

எனக்கு 15 பக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தினகரனின் புகழாரம் மட்டுமே இருந்தது.

இவர்கள் நோட்டீஸ் அனுப்பியதால் அமைதியாக இருக்க போவதில்லை எங்கள் கட்சி இனி இன்னும் வலிமையாக செயல்படும் என திவாகரன் தெரிவித்து உள்ளார்.