Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் சீனில் சீனாக வரும் சசிகலா.. வரும் 16ம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு செல்கிறார்.. களையபோகும் மெளனம்.!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை முடிந்து விடுதலையானார். இதையடுத்து அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் செல்லவில்லை.

Sasikala is going to Jayalalithaa memorial on the 16th
Author
chennai, First Published Oct 7, 2021, 11:02 AM IST

வரும் 16ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை முடிந்து விடுதலையானார். இதையடுத்து அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் செல்லவில்லை.

இதையும் படிங்க;- ஓ.பி.எஸின் அதிர்ஷ்டம் அது.. சசிகலாவுக்கு அது பலன் அளிக்காது.. பூங்குன்றன் சொல்லும் ரகசியம்..!

Sasikala is going to Jayalalithaa memorial on the 16th

இந்நிலையில், அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வருகிற 16ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு முதன்முறையாக  சசிகலா செல்ல உள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உருக்கமாகப் பிரார்த்தனை செய்கிறார். மறுநாள் 17ம் தேதி, தி.நகரில் இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்குச் செல்லும் சசிகலா, ராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார். 

Sasikala is going to Jayalalithaa memorial on the 16th

இதையும் படிங்க;- போயஸ் கார்டனுக்கு திடீரென வருகை தந்த சசிகலா... என்ன செய்தார் தெரியுமா?

அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிவிட்டு, எம்.ஜி.ஆரின் காது கேளாத பள்ளிக்குழந்தைளுக்குப் பல நலத்திட்ட உதவிகளை சசிகலா வழங்க உள்ளார். மேலும், அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, பல உண்மைகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா சமாதிக்கு சென்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios