sasikala is afraid of me says madhavan
தீபாவும் நானும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக தொண்டர்கள் எங்கள் பின்னால் வந்து விடுவார்களோ என்று சசிகலாவுக்கு பயம் என்று எம்.ஜி.ஆர். ஜெ.ஜெ. திமுக பொது செயலாளர் மாதவன் கூறியுள்ளார்.
தீபா குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மாதவன், தீபாவையும் என்னையும் சசிகலா குடும்பம் வேண்டுமென்றே பிரிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
தீபாவும் நானும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக தொண்டர்கள் எங்கள் பின்னால் வந்து விடுவார்களோ என்று சசிகலாவுக்கு பயம். அதனால் எங்களை சசிகலா குடும்பம் வேண்டுமென்று எங்களை பிரிக்கிறது என்று மாதவன் கூறியுள்ளார்.

உங்கள் கட்சியின் கொள்கைகள் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த மாதவன், கட்சி மாநாட்டு கூட்டத்தில் கொள்கைகளை அறிவிப்போம் என்றார். கட்சி பதிவு எண் கிடைத்த பிறகு நடைபெறும் மாநாட்டு கூட்டத்தில் கொள்கைகளை அறிவிப்போம் என்று கூறினார்.
நான் அம்மாவை கடவுளாக வணங்குகிறேன். அம்மாவின் பெயரை நான் சொல்லவே மாட்டேன் என்றும் மாதவன் கூறியுள்ளார்.

கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, முதலமைச்சர் வேட்பாளர் நான்தான் என்றும், என்னைவிட கட்சியில் சிறந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளதாகவும் மாதவன் தெரிவித்தார்.
தீபா பேரவை நிர்வாகி ராஜா என்பவர் உங்களைபற்றி பேசியது குறித்த கேள்விக்கு, அந்த ராஜா யார் என்றே எனக்கு தெரியாது என்று மாதவன் கூறியுள்ளார்.
