பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா,  நல்லெண்ண அடிப்படையில் சிறைக்கைதிகளை விடுவிப்பதற்கு பல்வேறு விதிகள் உள்ளது. ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை, அந்த விதிகளுக்குள் இது வராது. எனவே, முன் கூட்டியே சசிகலா விடுதலை என்பது குறித்த கேள்வியே எழவில்லை என்று ரூபா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது. மேலும் சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலக்கட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல், நன்னடத்தையுடன் நடந்து கொண்டால், அந்த அடிப்படையிலும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடம் உள்ளது. சட்ட விதி இந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே சசிகலா சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையாகிறார். பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, முன்கூட்டியே விடுதலை ஆவார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அவர் இன்னும் சில மாதங்களில் ரிலீசாகி அதிமுகவின் ஒற்றைத் தலைமைப் பொறுப்பை ஏற்பார் என பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தப்போது சசிகலா விவகாரத்தில் முன் கூட்டியே விடுதலை சாத்தியம் இல்லை எனக் கூறுகின்றனர். 

சிறைக்குள் சிறப்பு சலுகைகள் பெறுவதற்காக சசிகலா லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை எழுப்பியவர் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா ஐபிஎஸ். சசிகலாவுக்காக தனி சமையலறை சிறப்பு அறைகள் போன்றவற்றையும் ஒதுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் கர்நாடக அரசு உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க செய்தது.

கர்நாடக சிறைத்துறையை இந்த விவகாரம் உலுக்கி எடுத்தது. சிறைத்துறை அதிகாரி ரூபாவுக்கு பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்தன. சிறைத்துறையின் செயல்பாடுகள் கேள்விக்குறியானது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் சசிகலா. ஆகையால் ஊழல் வழக்கில் சிக்கியவர்களை நன்னடத்தையை காட்டி அவ்வளவு சீக்கிரமாக முன் கூட்டியே விடுதலை செய்து விட முடியாது. 

ஆகையால் நன்னடத்தை விதிகளின் கீழ் முன்கூட்டியே சசிகலா விடுதலையாக வாய்ப்பே இல்லை என்கிறனர் கர்நாடக காவல்துறை அதிகாரிகள். நன்னடத்தை விதிகளின் முன்பே விடுதலை செய்ய அந்த வழக்கின் தன்மையையும் பார்க்கப்படும். ஆகையால் சசிகலா 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என கர்நாடக சிறைத்துறை வட்டாரத்தினர் உறுதிபடக் கூறுகின்றனர்.