சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றவுடன் அவரது முதல் பேட்டியக இந்தியா டுடேவுக்கு அளித்தார் , அதில் ஜெயலலிதா பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா டுடே கான்க்ளேவ்" தென் இந்தியாவின் முக்கிய நபர்கள் , முதல்வர்கள், நடிகர் நடிகைகள், தொழில் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொள்ளும் இந்தியா டுடே மாநாடு சென்னையில் கிண்டி சோழா ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. 

தற்போது நான்கு தென் மாநில முதல்வர்கள் உட்பட நாட்டில் பல முக்கியஸ்தர்கள்  அரசியல் , சினிமா பிரபலங்கள் கமல் , தமன்னா  உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளரான சசிகலா குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். பின்னர் ஜெயலலிதா படத்தை திறந்துவைக்க அவர் அழைக்கப்பட்டார். படத்தை திறந்து வைத்தவுடன் பிரம்மாண்ட திரையில் ஜெயலலிதா படத்துடன் அவரை பற்றி புகழாரம் சூட்டப்பட்டது. 

பின்னர் செய்தியாளர் அவரை பேட்டி எடுத்தார். சசிகலாவின் முதல் பேட்டியில் இந்தியா டுடேவின் இந்த முயற்சியை பாராட்டுகிறேன் என்று தெரிவித்த அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சியில் நிச்சயம் கலந்துகொண்டிருப்பார், ஏனென்றால் அவர் இந்தியா டுடேவை மிகவும் விரும்பியவர் என்று தெரிவித்தார்.