தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைபெறவில்லை சசிகலாவின் ஆட்சி தான் நடைபெறுகிறது என்றும் ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கால் தான் சசிகலா இன்று தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என அதிமுக நிர்வாகி கௌரி சங்கர் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவுக்கு எதிராகவே உள்ளது.

அதிமுகவின் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தவிர அனைத்து தரப்பினரும் சசிகலா தலைமையை விரும்பவில்லை.

இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போக்கொடி உயர்த்தியதால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு உருவானது.

ஓபிஸ்க்கு பதிலாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்படார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதேநேரத்தில் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து துரத்தப்பட்ட டி.டி.வி.தினகரனை, சசிகலா சிறை செல்லும் முன்பு அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துச் சென்றார்.

இதனால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பினாமி ஆட்சி, குடும்ப ஆட்சி ,சிறையில் இருந்து இயக்கப்படும் ஆட்சி என பொது மக்களால் அழைக்கப்படுகிறது.

திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் அணியினர் என அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியை பினாமி ஆட்சி என்றே அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக நிர்வாகி, தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சி பினாமி ஆட்சி அல்ல என்றும் சசிகலாவின் ஆட்சிதாள் என்றும் தெரிவித்தார்.

சசிகலாவின் அறிவுரையின் பேரில் டி.டி.வி.தினகரனின் மேற்பார்வையில் தான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.அடுத்த நான்கரை ஆண்டு காலமும், சசிகலாவின் ஆட்சிதான் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைவிட கௌரி சங்கர் கூறிய மற்றோரு கருத்துதான் அதிமுகவினரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கால்தான் தற்போது சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.