சசிகலா :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிமுக எம்எல் ஏக்கள் கூட்டத்தை குறைந்த கால இடைவெளியில் மீண்டும் சசிகாலா கூறுகிறார்.இது அவர் முதல்வராவதற்கான , கூட்டமாக இருக்கலாம் என்று, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், ஆட்சியின் முதல்வராக ஒ.பன்னீர் செல்வமும் பொறுப்பெற்றனர்.

முதல்வராக வாய்ப்பு :

சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றவுடன், முதல்வராகவும் சசிகலாவே வரவேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் பகீரங்கமாக கோரிக்கை வைத்தனர்.

மக்களவை துணை தலைவர் தம்பிதுரையும் இதே கோரிக்கையை முன்வைத்தார். “முதல்வாராக” சசிகலா இதோ பதவி ஏற்கிறார் - அதோ பதவி ஏற்கிறார் என்று, எதிர்பார்ப்பு நிலவிவந்த வேளையில், உளவு துறை அறிக்கையில், கட்சி தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் சசிகலா முதல்வராக வருவதற்கு “எதிர்ப்பு மனோ நிலை” உள்ளதாக தகவல் வந்ததையடுத்து, தனது முடிவை சசிகலா சற்று ஒத்தி வைத்தார்.

வர்தா புயல் , ஜல்லிக்கட்டு விவகாரத்தை முதலமைச்சர் ஒபிஎஸ் கையாண்ட விதம் அவருக்கு , பொதுமக்களிடமும் எதிர்க்கட்சிகளிடமும் நல்லப் பெயரை சம்பாதித்து கொடுத்துள்ளது.

மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம் :

இதே நிலை தொடர்ந்தால், ஒ. பன்னீர் செல்வம் “நிரந்தர முதல்வராகிவிடுவார்” என்று கார்டன் தரப்பு நினைப்பதால் , இதனை ஆரம்ப நிலையிலேயே அவற்றை அகற்றும் எண்ணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டிய சசிகலா, குறைந்த கால அவகாசத்தில், மீண்டும் பிப்ரவரி 5 ஆம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுவதும், கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்களுக்கு , திடீரென பதவிகளை வாரி வழங்குவதையும் பார்க்கும் போது , பிப்ரவரி 5 ஆம் தேதி கூட்டத்தில், முதல்வராக சசிகலா பதவியேற்கும் முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .