Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி.! அதிமுகவிற்குள் கிளம்ப இருக்கும் அடுத்த பூதம்.!!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவில் இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும் என்று அமைச்சர் ஓஎஸ் மணியன் கூறியிருப்பது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Sasikala has no place in AIADMK Minister Jayakumar Saravedi! The next goblin to leave the superpower. !!
Author
Tamilnadu, First Published Jul 10, 2020, 8:39 PM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அதிமுகவில் இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும் என்று அமைச்சர் ஓஎஸ் மணியன் கூறியிருப்பது அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Sasikala has no place in AIADMK Minister Jayakumar Saravedi! The next goblin to leave the superpower. !!

சமீபத்தில் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் சசிகலா விடுதலை தொடர்பான பதிவை வெளியிட்டிருந்தார். ஆகஸ்ட் 15ம் தேதி சசிகலா பொதுமன்னிப்பில் விடுதலை ஆவார் என்று செய்தி வெளியானது. ஆனால் சசிகலா விடுதலை ஆவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அவருக்கு நன்னடத்தையின் விதியின் கீழ் வெளிவர முடியாது என்று சிறைதுறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.ஆனாலும் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் கட்சி சசிகலா பக்கம் போகும் என்றெல்லாம் பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது. 

Sasikala has no place in AIADMK Minister Jayakumar Saravedi! The next goblin to leave the superpower. !!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்புக்கு வந்தார். இதன்பின்னர் கூவத்தூர் கூத்துக்கு பின்னர் அதிமுக பெரும் மாற்றம் ஏற்பட்டது.சசிகலா சிறை சென்றதும் அதிமுகவில் தலைகீழாக மாறியது. அதன்பிறகு கடந்த 2017, செப்டம்பர் 12-ம்தேதி அவர் அதிமுக பொதுக்குழுவால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.கடந்த 2019, ஜூன் 13-ம்தேதியில் இருந்து அதிமுக இரட்டைத் தலைமையால் இயக்கப்பட்டு வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 பிப்ரவரி 15-ம்தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25-ம்தேதி பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை ஆவார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.இந்த பதிவு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Sasikala has no place in AIADMK Minister Jayakumar Saravedi! The next goblin to leave the superpower. !!

இந்தநிலையில் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது... "சசிகலாவே அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அதிமுகவில் மட்டுமல்ல அரசிலும் இடம் கிடையாது. அதற்குதான் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எவருக்கும் அதிமுகவில் இடமில்லை என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், மணியன் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று பதில் அளித்துள்ளார். அதிமுக அமைச்சர்களுக்குள் சசிகலா குறித்து இருவேறு கருத்துக்கள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios