கடலில் பேனா சிலை வைக்க ரூ 80 கோடி இருக்கு ஆனா, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மட்டும் தயக்கமா.? சசிகலா ஆவேசம்

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை விரைந்து அளித்திட தமிழக அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sasikala has demanded compensation for rain affected farmers

மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு

மழையால் பாதிப்படைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 35,000 வழங்க வேண்டும் என சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஐந்து லட்சம் ஏக்கர் நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விளை நிலங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் பயிர்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் சொல்லி வேதனை தெரிவிக்கின்றனர். பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பது போல், அறுவடைசெய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல்லும் மழை நீரில் நனைந்து வீணாவது மிகவும் வேதனை அளிக்கிறது.

ஈரோடு இடைத்தேர்தலில் அமமுக யாருக்கு ஆதரவு.? தொண்டர்களுக்கு உத்தரவிட்ட டிடிவி தினகரன்

Sasikala has demanded compensation for rain affected farmers

ஹெக்டேருக்கு ரூ 35,000 நிவாரணம்

டெல்டா விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பாடுபட்டு விளைவித்த பயிரை இழந்து தவிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ 35,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், நெல் கொள்முதலில் நெல் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்" எனவும் விவசாயிகள், கோரிக்கை வைக்கின்றனர். இந்த நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனே நிறைவேற்றிட வேண்டும். அதே போன்று, தேவையான இடங்களில், தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறந்திடவும், கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வெளிப்படையான கணக்கெடுப்புகள் நடத்தப்படவேண்டும்.

Sasikala has demanded compensation for rain affected farmers

பேனா நினைவு சின்னத்திற்கு பல கோடி

தமிழக அரசு பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இன்றைய இடுபொருட்களின் விலையேற்றம், உர விலை உயர்வு போன்ற காரணங்களால் ஹெக்டேருக்கு ரூபாய் 35,000 அளவுக்கு விவசாயிகள் செலவிட்டு இருக்கின்றனர். எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடலில் பேனா சின்னம் வைக்க 80 கோடி செலவிட தயாராக இருக்கும் இந்த ஆட்சியாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை அளிக்க தயங்குவது ஏன்? எனவே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை உடனே வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படியுங்கள்

முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை.! வீட்டிற்கே நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios