சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, செயற்கை ஆக்சிஜன் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக  விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 20ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, பௌரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா, அதன் பின் விக்டோரியா கொரோனா சிகிச்சை மையத்தில் ஜனவரி 21ம் தேதி சேர்க்கப்பட்டார். தொடர்ந்து 6 நாட்களாக அங்கே சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல் நிலை பற்றி விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சசிகலா சுவாசிக்க தொடங்கினார். கடந்த 5 நாட்களாக சசிகலாவுக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. உடல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, செயற்கை ஆக்சிஜன் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

 சசிகலாவின் நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 65 என்ற நிலையில் நார்மலாக இருக்கிறது. ரத்த அழுத்தம் 156/76 mm hg என்ற அளவில் நார்மலாக உள்ளது. சுவாசத்தின் எண்ணிக்கை நிமிடத்துக்கு 20 என்ற வகையில் நார்மலாக இருக்கிறது. சசிகலாவின் ஆக்ஸிஜன் 97% இயற்கையாகவே கிடைக்கிறது. நிமிடத்துக்கு 2 லிட்டர் வீதம் ஆக்ஸிஜன் அளிக்கப்படுகிறது. சர்க்கரை அளவு 178 ஆக உள்ளது. இதற்காக இன்சுலின் கொடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.