சசிகலா ஆஜராகும் தனிகோர்ட் ரெடி .....

சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 போரையும்  சொத்து குவிப்பு வழக்கில்   குற்றவாளி என  அறிவித்து உச்சநீதிமன்றம்    உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை  தொடர்ந்து தற்போது இவர்கள் 3 போரையும், உடனடியாக பெங்களூர்  நீதிமன்றத்தில்  ஆஜராக  வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது  சசிகலா பெங்களூர்  நீதிமன்றத்திற்கு செல்வதற்கான முன்னேற்பாடுகள்  நடந்து வருகிறது.

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள தனி கோர்டில் ஆஜராக வேண்டும்  என்பதால், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டை சுத்தம் செய்யும் பணி  நடை பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக இதே கோர்ட்டில் தான் நீதிபதி குன்ஹா சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனி கோர்ட் தயார் :

பெங்களூரில் தற்போது தனி கோர்ட் தயார் நிலையில் உள்ளதால், இன்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆஜராவார்கள் என்று தகவல்  வெளியாகி உள்ளது. அவர்கள் கோர்ட்டில் ஆஜரானதும் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்வார். ஆவணங்களை நீதிபதி சரிபார்த்த பின்னர் மூவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என  செய்திகள்  வெளியாகி உள்ளது.