அதிமுகவின் தற்போதைய நிலைமை குறித்தும், அதிமுகவில் அடுத்த தன் அடுத்த வியூகம் குறித்தும் கட்சித் தொண்டர்களிடம் சசிகலா கைப்பேசியில் உரையாடு வரும் நிலையில், தற்போது அவர் மய தேவர் குடும்பத்தினருடன் உரையாடி இருக்கும் ஆடியோவும் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  

அதிமுகவின் தற்போதைய நிலைமை குறித்தும், அதிமுகவில் அடுத்த தன் அடுத்த வியூகம் குறித்தும் கட்சித் தொண்டர்களிடம் சசிகலா கைப்பேசியில் உரையாடு வரும் நிலையில், தற்போது அவர் மய தேவர் குடும்பத்தினருடன் உரையாடி இருக்கும் ஆடியோவும் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சட்டமன்ற தேர்தலின்போது அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதாக தெரிவித்த சசிகலா, தற்போது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிமுக தொண்டர்களுடன் பேசி அதற்கான ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. கொரோனா தாக்கம் முடியட்டும், கட்டாயம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சித் தொண்டர்களை சந்தித்து, விரைவில் கட்சியை காப்பாற்றுவேன் என அவர் அதில் கூறி வருகிறார். அவர் அதிமுக தொண்டர்களிடம் பேசிவரும் ஆடியோ வெளியாவதையடுத்து, சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியில் இருந்தே தூக்கம் வேலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் எம்ஜிஆருக்கு பாதுகாப்பாக இருந்தவரும் எம்ஜிஆரால் திண்டுக்கல்லில் போட்டியிட வைத்து இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றவருமாகிய மாயத்தேவர் குடும்பத்தினருடன் பேசியுள்ளார் : அதன் ஆடியோ வெளியாகி உள்ளது, அதில் அவர் பேசியிருப்பதாவது, 

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கி திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத் தேவர் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றார். முதல் வெற்றியை என்றைக்குமே மறக்க முடியாது. எல்லாரும் பதவிக்கு ஆசைப்படுவார்கள் நான் என்றைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் நிற்க வைக்கப்பட்டு வெற்றிபெற்றவர் மாயத்தேவர், அதனை இந்த கட்சி இருக்கும் வரை யாராலும் மறக்க முடியாது. தலைவருடைய கட்சியை என்றைக்கும் யாரும் அழித்துவிட முடியாது. இந்த கட்சி மென்மேலும் வளரும் எல்லாம் நல்லதாக நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சசிகலாவின் நடவடிக்கைகளால் நிம்மதி இழந்திருக்கம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர், இப்போது அவர் மாயத்தேவர் குடும்பத்தினருடன் பேசியுள்ள ஆடியோவால் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.