கடந்த ஒன்பது நாட்களாக, தஞ்சை அருளானந்தம் நகரிலுள்ள நடராஜன் இல்லத்தில் தங்கியுள்ள சசிகலா எப்போதுமே கணவர் நடராஜனின் நியாபகமாகவே உறவினர்களிடம் சொல்லி அழுகிறாராம்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன், கடந்த 20ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அதிமுகவினர் தவிர திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, நல்லகண்ணு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கட்சி வேறுபாடுகளின்றி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நடராஜன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை கொண்டு செல்லப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. கணவர் மறைவையடுத்து 15 நாள்கள் பரோலில் கடந்த 20ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, தஞ்சையில் தனது கணவரின் உடலைக் கண்டு கதறி அழுதார். தொடர்ந்து நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரேயுள்ள அவருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பரோல் காலம் முடியும் வரையில் எண் - 12, பரிசுத்தமா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும். பரோல் காலகட்டத்தில் எந்த விதத்திலும் ஊடகங்களைச் சந்திப்பது அல்லது பத்திரிகையாளர்களிடம் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. பரோல் காலகட்டத்தில் அரசியல் ரீதியிலான சந்திப்புகளோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ நிச்சயம் கூடாது. என பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளதால் சசிகலா எங்குமே செல்வதில்லை.

அவர் எப்போதுமே மறைந்த கணவரின் நியாபகமாகவே இருக்கிறாராம். நடராஜன் சசிகலாவை விட்டுப் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் சசிகலாவுக்கு அனைத்து ஆலோசனைகளும் கூறுவது நடராஜன்தான். அவர் இருந்தவரை யானை பலம் என்று நினைத்து வாழ்ந்த சசிகலாவுக்கு, நடராஜன் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில நாள்களாக இரவு சசிகலா சரியாக தூங்காமல் அடிக்கடி எழுந்திருப்பதும் நடப்பதுமாக இருக்கிறார்.

உடனிருந்தவர்கள், உறவினர்கள் ஆறுதல் சொல்லி தூங்கச் சொல்லியும் தூக்கம் வரவில்லை என்று கூறுகிறாராம். படுத்தாலே அவர் நியாபகமாகவே இருக்கிறது. தூக்கம் வந்தால் கனவில் கஷ்டமாக பேசுகிறார் என்று புலம்பி கண்கலங்குகிறார் சசிகலா” என்று முடித்தார்கள்.