வாய்ப்பு கிடைத்தால் அதிமுகவையும், பிஜேபியை ’வார்த்தைக்கு வார்த்தை வெச்சு செய்து வந்த தினகரன் கடந்த சில நாட்களாக மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் தெறிக்கவிட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளது.

சமீபத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தினகரன், இந்தத் திட்டம் திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இப்போது திமுக இதை எதிர்ப்பதாக இரட்டை வேடம் போடுகிறது. இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே வழங்கப்படுகிற விலையில்லா பொருட்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பது தான் அமமுகவின் கோரிக்கை என்று நைசாக பேசி நழுவினார்.

இதனையடுத்து, முதல்வர், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் பற்றிய கேள்விக்கு, போயிட்டு தான் வரட்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கணும், நாங்களும் முதலீடுகளை ஈர்க்கணும்னு தான் எதிர்பார்க்கிறோம். ஈர்த்து வந்தால் ஹேப்பி என்று கூறினார் தினகரன். இவ்வளவு நாள் செய்தியாளர்களை சந்தித்தால் கலாய்ப்பதாகட்டும், விமர்சிப்பதென்றாலும் வெளுத்து வாங்கிவந்த தினகரன் திடீர் மனமாற்றத்துக்கு காரணம் அரசியல் விமர்சகர்களை வியக்க வைத்திருக்கிறது.

சமீபத்தில், சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியிருந்தார்.,  இவர்களின் இந்த சந்திப்பு, அதிமுகவுக்குள் சமரச முயற்சி என்றே சொல்லப்பட்டது.  சந்திரலேகா உடனான  சந்திப்பிற்கு பின் தினகரனை நேற்று சிறைக்கு அழைத்துள்ளார். திடீரென அழைப்பு வந்ததால் தினகரன், அவரது மனைவி அனுராதா, விவேக், சகிலா, சசிகலாவின் பி.ஏ. கார்த்தி, என்று பலரும் நேற்று சசிகலாவை சந்திக்க பதறியடித்து ஓடினர்.

இவர்களில், தினகரன், அனுராதாவுடன் மட்டும் சுமார் ஒரு மணி நேரம் தனியாகவே பேசியிருக்கிறார். அப்போது, கடந்த மாதம் சந்திர லேகா பிஜேபியின் தூதுவராக தன்னை சந்தித்துப் பேசியது பற்றி தினகரனிடம் பேசிய சசி, இப்போ நிலைமை ரொம்ப மோசமா போயிகிட்டருக்கு, ப.சிதம்பரம் உள்ளே தூக்கி போட்டது, கர்நாடகாவின் தலைவலியாக இருந்த டிகே சிவக்குமாரை தூக்கியது போன்ற பல சம்பவங்களை தெளிவாக சொல்லிய சசிகலா, இப்போதைக்கு பிஜேபி நிழலில் இருப்பதை தவிர நமக்கு வேறு வழியே இல்ல, அவங்களை எதிர்த்தால் பல அரசியல் பிசினஸ் என தங்கள் குடும்பத்தாரை பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என நாசுக்காக சொல்லியிருக்கிறார்.  

அதேபோல அவங்களுக்கும் தமிழகத்தை ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க நம்மளோட உதவி தேவைப்படுது. இப்ப அவங்களே நம்மகிட்ட பேச தூது அனுப்புறாங்க. தேர்தல் நெருங்க நெருங்கதான் மோடி நம்மளைப் பத்தி தெரிஞ்சுப்பார்னு நினைக்கிறேன்’ ஆக பிஜேபியுடன் தினகரனை பேச சொன்னாராம் சசிகலா.