சசிகலா, தினகரனால் கைவிடப்பட்ட ஜெயலலிதா வளர்ப்பு மகன்... இப்போது நிலையை பார்த்தீங்களா..!
சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த நிலையில் அபராத தொகையை யார் கட்டுவது என்ற குழப்பத்தால் சுதாகரன் தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த நிலையில் அபராத தொகையை யார் கட்டுவது என்ற குழப்பத்தால் சுதாகரன் தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், சசிகலா, இளவரசி ஆகியோர் கடந்த நவம்பரில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தினர். இதையடுத்து சசிகலா ஜனவரி 27-ம் தேதியும், இளவரசி பிப்ரவரி 5-ம் தேதியும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் அக்கா மகனுமான சுதாகரன் மட்டும் இன்னும் சிறையில் இருக்கிறார். அவர் இவ்வழக்கில் 1996-ல் தமிழக சிறையில் 92 நாட்கள் இருந்ததால், அவரது சிறை தண்டனைக் காலம் கடந்த செப்டம்பரில் நிறைவடைந்தது. ஆனால் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தாததால் அவர் விடுதலை செய்யப்படவில்லை. சுதாகரனின் உடன் பிறந்தவர்கள் தற்போது அமமுக பொதுச்செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் மற்றும் பாஸ்கரன் மற்றும் சித்தி சசிகலா ஆகியோர் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ஒருவேளை அபராத தொகையை கட்ட முடியாவிட்டால், மேலும் ஓர் ஆண்டு தண்டனை சுதாகரன் அனுபவிக்க நேரிடும். ஜெயலலிதா வளர்ப்பு மகனான சுதாகரனுக்கு தமிழகமே மிரளும் அளவுக்கு பல கோடி ரூபாயை செலவழித்து திருமணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.