மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும். சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்று பரபரப்பு பேட்டியளித்தார். 

ஜெயலலிதா வழிகாட்டிச் சென்றவர், கட்சியை வழிநடத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இரட்டை தலைமை இருப்பதால் உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து புதுகோட்டையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திண்டுக்கல் ராஜன்செல்லப்பாவின் கருத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும்  அதிமுக தற்போது இரட்டை தலைமையில், ஆளுமையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்..

இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது.  ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த, இடைத்தேர்தலில் வென்ற 9 எம்எல்ஏக்களை தடுத்ததாக கூறுவது பொய்யானது என்று தெரிவித்தார்.

சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தால் அவரது தலைமையை ஏற்றுக் கொள்வீர்களா ? என செய்தியாளர்கள் கேட்டதற்கு ,  சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என கூறினார். சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எப்போதும் அதிமுகவில் இடம் கிடையாது என்றும் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.