Asianet News TamilAsianet News Tamil

கோபத்தில் திருப்பி அனுப்பிய சசி... சித்தி “மௌனவிரதம்”னு புருடா விட்ட தினா! பரப்பன அக்ராஹாராவில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Sasikala does not accept any of Dhinakaran peace attempt
Sasikala does not accept any of Dhinakaran peace attempt
Author
First Published Dec 29, 2017, 8:39 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். வாழ்வா சாவா போட்டியில் அதிமுகவை வீழ்த்தி அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளார் தினகரன். கஷ்டப்பட்டு, களப்பணியாற்றி அனைத்து எதிர்ப்பையும் மீறி, ஆளும் கட்சியையும், பலமான எதிர்கட்சியையும் வீழ்த்தி பெற்ற வெற்றியை தனது சித்தியிடம் சந்தோஷமாக சொல்லிவிட்டு வாழ்த்து பெற சென்றார் தினகரன்.

எப்படியும் தன்னை வாயார வாழ்த்தி “வா மகனே வா...” என சித்தி நம்மை அழைப்பார் என சிறைக்குள் சென்றார் தினகரன். ஏற்கனவே செம கடுப்பில் இருந்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்துப் போட்டியிடுவதில் சித்திக்கு விருப்பமே இல்லையாம். இதை ஏற்கனவே  தினகரனிடம் அழைத்து பேசிய சித்தி நீ தேர்தலில் இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டால் அது அக்காவை எதிர்ப்பது போல ஆகிவிடும்.

Sasikala does not accept any of Dhinakaran peace attempt

நாம ஜெயிக்கறது சந்தோஷம்னாலும் அதிமுக கழகம் தோற்பது போல ஆகிவிடும். அது அவங்க நின்ற தொகுதி. அங்கே அவங்க போட்டியிட்ட இரட்டை இலை தோற்கக் கூடாது என்பதால்தான் சொல்றேன், ஒரு வேலை கட்சி நம்மிடம் வந்துவிட்டால் திரும்பவும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டி வரும். நீ அமைதியாக இரு எதுவாக இருந்தாலும் அடுத்த தேர்தலில் பார்த்துக்கலாம்... என்றாராம், எதையும் காதுகொடுத்து கேட்காத தினா, கூல் பதிலை சொல்லிவிட்டு வந்துள்ளார். சரி அப்படி தான் செய்தாரே... அதோடு விட்டாரா? தேர்தலில் எப்படியும் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற சூழலில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், தனது ஆதரவாளரிடம்  கொடுத்த ஜெயலலிதா  மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, மீடியாவுக்கு கொடுத்ததை சசியை அடுத்த கட்ட டென்ஷனுக்கு கொண்டு சென்றதாம்.

Sasikala does not accept any of Dhinakaran peace attempt

தினகரனின் அடுத்தடுத்த மூவ் சசியை ரொம்பவே பாதித்ததாம்,  ‘இதுக்காகவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்... ஒட்டுமொத்தமா சொதப்பிட்டனே தினகரன்...’ என சிறையில் இளவரசியிடம் புலம்பிகொண்டிருந்தாராம். வாக்கு எண்ணிக்கையை பார்த்த சசிகலா தொடர்ந்து முன்னிலையில் இருந்தபோது அவர் பெரிதாக அலட்டிகொல்லவே இல்லையாம், ‘அவன் பணம் கடுத்து வாங்கியிருந்தாலும் பரவாயில்லை, நான் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த அக்காவோட வீடியோவ வச்சி தான ஜெயிச்சான் இதுல சந்தோஷப்பட என்ன இருக்கு?’ என புலம்பியுள்ளாராம்.

Sasikala does not accept any of Dhinakaran peace attempt

சித்தி எப்படியும் நம் மீது கோபத்தில் இருப்பார் என்று தெரிந்த தினகரன் நாலு நாள் விட்டே சித்தியை சமாதானம் செய்ய சிறைக்கு சென்றாராம். ஜெயிலுக்கு வந்து சசிகலாவை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும், சசிகலா ஒரு வார்த்தைகூடப் பேசவே இல்லை. பார்வையாளர்கள் அமரும் வரவேற்பு அறைக்குச் சென்று சசிகலா, இளவரசி இருவரும் காத்திருந்தார்களாம். தினகரன் உள்ளே வந்து இருவருக்கும் வணக்கம் சொல்லியிருக்கிறார். முகத்தைகூட பார்க்காமல் தலைகுனிந்தே இருந்தார்களாம்.

Sasikala does not accept any of Dhinakaran peace attempt

தினகரன் முடிந்தவரை கலர் கலரா கதை விட்டுள்ளார், புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ஆனால் இவர் சொன்னதற்கு எந்த ரியாக்ஷனும் இல்லையாம், கடைசியில் கிளம்பும்போது, ‘இது உங்களோட வெற்றி. உங்களால் கிடைத்த வெற்றி’ என சசிகலாவைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். தினகரனின் இந்த வார்த்தையால் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டாராம். கடைசிவரை சசிகலா தினகரனுடன் பேசவே இல்லையாம். சிறையிலிருந்து வெளியில் வந்த தின பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டல் என்ன பதில் சொல்வது? என யோசித்துக்கொண்டே வந்தாராம். அதனால்தான் என்ன சொல்வதென யோசித்த தினகரன், வெளியே வந்ததும்  பத்திரிகயாலர்களை சந்தித்த தின சித்தி “மௌனவிரதம்” என சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios