Asianet News TamilAsianet News Tamil

இப்போ கட்டம் சரியில்ல... நமக்கான நேரம் வந்தே தீரும்...” எம்ஜிஆரைப் போல நாம யாருன்னு காட்டுவோம்... சசி நெக்ஸ்ட் டார்கெட்

Sasikala Discussed with her supporters regards Political plan
Sasikala Discussed with her supporters regards Political plan
Author
First Published Mar 23, 2018, 12:41 PM IST


நமக்கான நேரம் வந்தே தீரும்... சிறையில் இருந்து வெளியே வந்து எம்ஜிஆரைப் போல பிரமாண்டமான கூட்டத்தைக் கூட்டி காட்டுவேன் என தஞ்சாவூர் தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமான புதிய பார்வை ஆசிரியர் நடராஜனின் மறைவை அடுத்து அவரது மனைவி பெங்களுரு சிறையிலிருந்து பதினைந்து நாட்கள் பரோலில் வந்தார்.

Sasikala Discussed with her supporters regards Political plan

இந்நிலையில் நேற்று முன்தினம் இறுதிசடங்குகள் நடந்து முடிந்ததும் விளார் கிராமத்தில் நடராஜனின் பங்களாவில் சோகமாக அமர்ந்திருக்கிறார் சசிகலா. இதனையடுத்து சசி அவரது உறவினர்களுடன்  தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றார் சசிகலா.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 25-ம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார் தினகரன்.  'நடராஜன் மரணத்தால் உண்ணாவிரதம் தள்ளிப் போகும்' என நினைத்த நிலையில், தங்க.தமிழ்ச்செல்வன், ' காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காது.

கர்நாடக தேர்தல் முடியும் வரை மத்தியில் உள்ளவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். மத்திய அரசுக்குப் பயந்து, இங்குள்ள அரசு செயல்படுகிறது. உண்ணாவிரதம் குறித்து கேட்டறிந்த சசிகலா, ' காவிரி விவகாரம் என்பது டெல்டா மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. விவசாயப் பெருங்குடி மக்களின் ஜீவாதாரம் அதில் அடங்கியிருக்கிறது.

கணவர் இறந்ததைப் பற்றி நினைக்க வேண்டாம். உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள்' நம்ம பவரை இப்போதுதான் காட்டவேண்டும் என கூறிவிட்டார். சசியின் இந்த கட்டளையால் மிகப் பிரமாண்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதர்க்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.

Sasikala Discussed with her supporters regards Political plan

15 நாள் பரோல் ஆனால் இன்னும் 11 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஒவ்வொரு நொடியையும் தனது அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடவே இதை எடுத்துக் கொண்டுள்ளார்.

பரிசுத்தம் நகர், தஞ்சாவூரைத் தாண்டி எங்கும் போகக் கூடாது என கண்டிஷன் போட்டு பரோலில் அனுப்பியிருக்கிறார்கள். ஆனாலும் தமிழகத்தின் ஆளும் கட்சியின் அத்தனை செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார் சசி. எனவே மீதமிருக்கும் இந்த நாட்களை பரிசுத்தம் நகரில் உள்ள நடராஜனின் வீட்டில் இருந்தே காய் நகர்த்த திட்டமிட்டிருக்கிறார்.

மேலும் தனது உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த சசிகலா நேரம் வரும்போது நமக்கு எதிராகச் செயல்பட்டவர்களும் நம்மை நோக்கி வருவார்கள். எம்.ஜி.ஆரை எதிர்த்துச் சென்ற எஸ்.டி.சோமசுந்தரம் என்னவானார் என்பதை அனைவரும் அறிவார்கள். என பேசியிருக்கிறார். இதனை உணர்ந்துதான், மீண்டும் அக்காவிடம்(ஜெயலலிதா) மன்னிப்புக் கேட்டுவிட்டு கார்டனுக்குள் நுழைந்தோம்.

Sasikala Discussed with her supporters regards Political plan

இப்போது நமக்குச் சூழல் சரியில்லை. கணக்குப்படி பார்த்தால் இன்னும் 3 ஆண்டுகள் எனக்கு சிறைத் தண்டனை இருக்கிறது. நன்னடத்தை காரணமாக, இரண்டு ஆண்டுகளில் நான் வெளியே வந்துவிடுவேன். நான் வெளியில் வந்ததும் எம்.ஜி.ஆர் கூட்டிய  கூட்டத்தை நாம் திரட்டுவோம்.

நமக்குத்தான் மக்கள் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிப்போம். அதுவரை அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். நமக்கான நேரம் வந்தே தீரும்' எனப் பேசியிருக்கிறார் சசிகலா.

Follow Us:
Download App:
  • android
  • ios