அமமுக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் வெற்றிவேல். ஜெயலலிதா மரணம் குறித்த வீடியோக்களை அவ்வப்போது அணுகுண்டாக தூக்கி வீசி அதிமுக கட்சி தொண்டர்களை உணர்வுபூர்வமாக தட்டியெழுப்பியவர். அதே நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு வீடியோவை வைத்து ஆட்டம் காண்பித்தார்.இப்படியெல்லாம் அதிமுகவை அழ வைத்த வெற்றி இப்ப நம்மிடம் இல்லையே..! என்று சொல்லி சிறையில்  சசிகலா கதறி அழுததாக சொல்லப்படுகிறது.

கொரோனா காலத்திலும் அமமுக துடிப்பாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தினகரன் அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெற்றிவேலையும் தினகரன் கலந்து கொள்ள வைத்தார். இதுவே வெற்றிவேலுக்கு தொற்று ஏற்பட காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

வெற்றிவேல் மரணம் குறித்து தினகரனிடம் கேட்டறிந்த சசிகலா, வெற்றி மாதிரி நமக்கு உழைக்க இன்னொரு ஆளு கிடைக்குமா? அக்கா, ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த வீடியோவை வெளியிட்டு அதனால் வந்த எதிர்ப்புகளையெல்லாம் தூள்தூளாக்கி விசுவாசமாக இருந்தவர் வெற்றிவேல் தான் என சொல்லி அழுதுள்ளார். மேலும் நான் உன்னை சும்மா தான இருக்க சொன்னேன் எதுக்கு ஆலோசனை கூட்டமெல்லாம் நடத்தினாய் என வசமாக வசைபாடியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, வெற்றிவேல் வசம் கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அப்பலோவில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்களைக் கண்டெடுத்து கைப்பற்றும் படி தினகரனுக்கு சசிகலா உத்தரவிட்டார்.தற்போது வெற்றிவேல் வசம் கொடுத்து வைக்கப்பட்ட ஜெயலலிதா மரணம் குறித்த வீடியோ காட்சிகள் அடங்கிய வீடியோவை கைப்பற்றும் வேளையில் இறங்கியிருக்கிறார் தினகரன். அந்த வீடியோ இருந்தால் மட்டுமே ஜெயலலிதா மரண எப்படி நடந்தது என்று கட்சி தொண்டர்கள் மத்தியில் அம்பலபடுத்தி சசிகலா தன்னை நியாப்படுத்திக்கொள்ள முடியும்.