டி.டி.வி.தினகரனின் மாமியார் மரணம்…. பெங்களூரு சிறையில் கதறி அழுத சசிகலா…

டி.டி.வி.தினகரனின் மாமியாரும், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவியுமான சந்தான லட்சுமி மரணமடைந்தார். தனது அண்ணியின் மரண செய்தி கேட்ட சசிகலா சிறையில் கண்ணீர்பிட்டு கதறி அழுதார்

சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா  அடுத்தடுத்து பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறார்.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது.

சசிகலா ஜெயிலில் சொகுசாக இருந்த அறை மற்றும் அவர் ஜெயிலில் வலம் வரும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் சசிகலாவை சந்திக்க வருபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தினகரன் கூட இரண்டு முறை சசிகலாவை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். வக்கீல்களும் அவரை 10 நிமிடம் மட்டுமே சந்தித்து விட்டு திரும்பினர்.

சசிகலாவுக்கு ஜெயிலில் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் சசிகலா அதிர்ச்சியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மரணமடைவது அவரை மிகுந்த அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் உறவினர் மகாதேவன் மரணமடைந்தபோது  சசிகலாவுக்கு  பரோல் மறுக்கப்பட்டது.

நேற்று அண்ணி சந்தானலட்சுமி மரணமடைந்த செய்தி கேட்டு சோகத்துடன் காணப்பட்ட சசிகலா, தனக்கு பரோல் கிடைக்கவில்லை என்று தெரிந்தததும் சசிகலா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

கடந்த 4 மாதத்தில் உறவினர்கள் 2 பேர் இறந்ததால் மிகுந்த மன வருத்தத்தில் சசிகலா உள்ளார்.