சிறையில் இருந்து சசிகலா விடுதலையானால் நிச்சயம் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து அக்டோபர்  7ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல்வர் பங்கேற்கும் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறார். மேலும், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இது ஒருபுறம் இருக்க சசிகலா விடுதலை தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. சசிகலா விடுதலையானால் அதிமுகவை கைப்பற்றுவார். மேலும், சிறையில் இருந்து வெளியே வந்ததும் பெரும்பாலான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலா விடுதலையானால் அதிமுகவில் மாற்றங்கள் நிகழும் என்று பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுக உட்கட்சி பிரச்சினை என்பதால் அதில் தலையிட முடியாது என்றார்.