அமைச்சர் உதயகுமார் இன்று காலை சென்னை காமராஜர் சாலை, மெரினாவில் உள்ள ஜெயல்லிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சின்னம்மா சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என பலமுறை வற்புறுத்தினோம். அதன் பின் அவர், அதை ஏற்று கொண்டார். கட்சியை வழி நடத்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு, சசிகலாவுக்கு மட்டுமே திறமை இருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், இருந்து பல்வேறு கட்டங்களில் ஏற்பட்ட சோதனைகளை கண்டவர். சமாளித்து வந்தவர். அவர், ஜெயலலிதாவின் மறு உருவம்.

இதனால், தற்போதையை சூழலை சமாளிக்க அவரும், எங்களின் வலியுறுத்தலுக்கு சம்மதித்து, பொதுச் செயலாளராக பதவியேற்றார். இதேபோல் ஆட்சியிலும், அவர் வழிகாட்டுதல்படி நடக்க இருக்கிறது. எனவே, விரைவில் சசிகலா முதலமைச்சர் பதவியில் அமருவார். இதை உறுதியுடன் கூறுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.