சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொது செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 14ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சரணடைந்தனர். அங்குள்ள கைதிகள் போலவே, 3 பேருக்கு சாதாரண அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதையொட்டி, சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும், அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். ஏற்கனவே சசிகலா மீது பல்வேறு வழக்குகள் சென்னை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால், வழக்கு விசாரணைக்காக அடிக்கடி சென்னை வந்து செல்ல முடியாது. மேலும், சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை உள்ளதால், சென்னையில் உள்ள டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனவே, இதுபோன்ற காரணங்களை நீதிமன்றத்தில் முறையிட், அவரை சென்னைக்கு அழைத்து வந்துவிடுவோம் என அதிமுக வழக்கறிஞர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
