சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது. அவர் அமமுகவினரைத்தான் அழைத்துள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய சசிகலா, “நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.

 

இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன் எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- சசிகலாவின் அழைப்பு அமமுகவுக்கு தான் பொருந்தும், அதிமுகவுக்கு அல்ல. சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில்தான் உள்ளது என கூறியுள்ளார்.