ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் கடத்துவது அதிமுக கட்சியை பிளவு படுத்தும் செயல் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களை நேரில் சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
ஒவ்வொரு எம்.எல்.ஏக்களையும் தனித் தனியாக அழைத்துப் சசிகலா பேசினார்.
மேலும் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுமாறும் கேட்டுள்ளார்.
மக்களிடம் தனக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது எனவும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் யார் முதல்வராக வரவேண்டும் என நினைக்கின்றனர் எனவும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து சென்னை திரும்பிய சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ஆளுநர் முடிவுக்கு இன்றுவரை காத்திருந்தோம். ஆளுநர் காலதாமதபடுத்துவது கட்சியை பிளவு படுத்தும் செயல் என தெரிவித்தார்.
மேலும், அதிமுக எம்.எல்.ஏக்கள் மன உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
