அனைவரும் எதிர் பார்த்தது போலவே அதிமுகவின் உட்கட்சி நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. சின்னம்மா சசிகலா, அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போயஸ் கார்டனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, ஒ.பன்னீர்செல்வம் கையோடு எடுத்து வந்த கடித்ததை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வாசித்தார்.

அதில் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், மதிப்பிற்குறிய சின்னம்மா வி.கே.சசிகலா அவர்களை, அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில் சசிகலா கட்சி அலுவலகத்துக்கு வந்தார். எம்எல்ஏக்களிடம் நன்றியை தெவித்தபின், அவர்களிடம் மைக்கில் பேசினார்.

அதில், “தன்னை (சசிக்கலா) முதமைச்சராக வேண்டும் என முதலில் வலியறுத்தியவரே ஒ.பன்னீர்செல்வம்தான்” என தெரிவித்தார். தனது தலைமையிலான அரசு, மக்களுக்காக செயல்படும் எனவும் அவர் உறுதியளித்தார். பின்னர், மீண்டும் எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்தார்.