Asianet News TamilAsianet News Tamil

‘நான் ஒன்றும் திருடி கிடையாது... போலீஸ் ஜீப்பில் ஏற முடியாது’ - ஜெயிலில் சசிகலா வாக்குவாதம்

sasikala arguing-with-police
Author
First Published Feb 17, 2017, 4:13 PM IST


நான் ஒன்று திருடி கிடையாது, போலீஸ் ஜீப்பில் உட்கார வைத்து, அழைத்துச் செல்வதற்கு என்று  போலீசாருடன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வாக்குவதாம் செய்துள்ள விவரம் வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பெங்களூரு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பான 4 ஆண்டுகள் சிறையும், ரூ.10 கோடி அபாரதம் விதித்ததை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  

இதையடுத்து, கடந்த புதன்கிழமை சசிகலா,இளரவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

sasikala arguing-with-police

அதற் முன்பாக, பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து, சசிகலாவை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி, சிறைவாயில் வரை கொண்டு செல்ல போலீசார் முயன்றனர்.

அப்போது, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை போலீஸ் ஜீப்பில் ஏறுமாறு போலீசார் கூறியுள்ளனர். அப்போது அங்கு போலீசாருக்கும், சசிகலாவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது போலீசாரிடம், “ நான் ஒன்றும் திருடன் கிடையாது. போலீஸ் ஜீப்பில் திறந்த வெளியில் உட்கார வைத்து  ஊர்வலம் சுற்று வருவதற்கு. இங்கிருந்து சிறை எவ்வளவு  தூரம் இருந்தாலும் நான் நடந்தே வருகிறேன்.

ஜெயிலில் கூட இருப்பேன், ஆனால், ஜீப்பில் ஏற மாட்டேன்'' என வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், அவரை நடந்தே சிறைக்கு சசிகலாவை போலீசார் கொண்டு சென்றனர்.

sasikala arguing-with-police

மேலும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ சொத்துக்குவிப்பு வழக்கில் இதற்கு முன் முதல்வர்ஜெயலலிதாவுடன் சிறைக்கு வந்தபோது, சசிகலாவுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்தன. 

அப்போது ஜெயலலிதாவுக்கு முதல்வகுப்பு சிறை வசதிகளை இவரும் அனுபவித்தார். ஆனால், இப்போது சசிகலா தனது சிறையில் வி.ஐ.பி. வசதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

sasikala arguing-with-police

 இது அவருக்கு பெருத்த பின்னடைவாக இருந்தது. இதனால்தான், அவர் போலீஸ் ஜீப்பில் ஏறமாட்டேன் என்று கூறி பிரச்சினை செய்துள்ளார், போலீசாரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படக்கூடாது என்பதால், பொறுமையாகச் செயல்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட என்று சசிகலா இரவு முழுவதும் தூங்கவில்லை.  10அடிநீளம், 8 அடிஅகலம் அளவுள்ள சிறையில் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் கழிவறை வசதியும் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட  பெரும்பாலான நேரம் சசிகலாயாருடனும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார். தமிழ்நாட்டு செய்திகளைக் கூட விரும்பி அவர் படிக்கவில்லை'' எனத் தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios