Admk general secreatry sasikala appointed
அதிமுக ஆட்சி மன்றக் குழு தலைவராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மாற்றியமைக்கப்பட்ட ஆட்சி மன்றக் குழுவுக்கு சசிகலா தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழு உறுப்பினர்களாக செங்கோட்டையன், தினகரன், தமிழ்மகன் உசேன், வளர்மதி, ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் கூட்டணி அமைப்பது, எம்.பி. எம்.எல்.ஏ. உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உண்டு என்பது கூடுதல் தகவல்
