நியாயத்துக்கும் ஜனநாயத்துக்கும் கட்டுப்பட்டு பொறுமை காத்தேன் இனி பொறுமையாக செயல்பட முடியாது செய்ய வேண்டியதை செய்வோம் என்று சசிகலா தொண்டர்களிடையே பேசினார்.
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே தொடர்ந்து மோதல் போக்கு முற்றிவருகிறது.இந்நிலையில் போயஸ் தோட்டத்தில் தொண்டர்தகளிடையே பேசிய சசிகலா, இப்பிரச்சனையில் நாம் ஓரளவுதான் பொறுமை காப்போம். மிஞ்சினால் நாங்கள் செய்ய வேண்டியதை செய்வோம் என ஓபிஎஸ் க்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் அவர் பேசும் போது,
எனக்கு எல்லாமே ஒன்றுதான். அம்மா ஆட்சியையும் , கழகத்தையும் நீ பத்திரமாக காப்பாற்ற வேண்டும் என்று உறுதியாக சொல்லி சென்றிருக்கிறார்.

அம்மா சொன்னது போல் எஃகு கோட்டை இதை யாரும் அசைக்க முடியாது.இந்தியாவில் 3 வது கட்சி என்ற பெருமையை சேர்த்து சென்றுள்ளார். இயக்கம் நம்மிடம் இருக்கிறது. . அம்மா பல சோதனைகளை கண்டு இயக்கத்தை வளர்த்தவர்.

அம்மா நம்மிடம் தான் உள்ளார். அம்மா புல்லுருவிகளை அடையாளம் காட்டி கொண்டிருக்கிறார். 1.5 கோடி தொண்டர்கள் இருக்கும் வரை நம்மை பிரித்து ஆழ நினைக்கிறவர்கள் தோல்வி அடைவார்கள். நீங்கள் இவ்வளவு பேர்கள் துணை இருக்கும் போது நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை.

ஓரளவுக்கு தான் நாம் பொறுமை காக்க முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என ஓபிஎஸ் க்கு சசிகலா பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். பொது வெளியில் அவரின் இந்த மிரட்டல் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
