Asianet News TamilAsianet News Tamil

தட்டிக் கேட்காத கணவரும், தம்பியும்... சிறையில் பேயாட்டம் ஆடிய சசி! கண்டுக்காத குடும்பம்!

sasikala angry speech against her family members
sasikala angry speech against her family members
Author
First Published Feb 9, 2018, 1:57 PM IST


ஆர்.கே.நகர் தினகரன் வெற்றியடைந்ததும், அடுத்த சில தினங்களில் தனது அதிரடியை தொடங்கினார். தினகரனின் இந்த வளர்ச்சியை ரசிக்காத இளவரசி குடும்பத்தில் உள்ளவர்கள் தனி ட்ராக்கில் போக ஆரம்பித்தனர். தினகரனின் நடவடிக்கை எதுவுமே சரியில்லை அவர் நினைத்ததை செய்கிறார், குடும்பத்தில் யாரையும் மதிப்பதில்லை என சசிகலாவிற்கு புகார்கள் குவிந்திருக்கிறது.

தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வெளியாக உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இருந்து ஒருவரை முதல்- அமைச்சராக தேர்வு செய்ய வேண்டும் என்று தினகரன், முதல்-அமைச்சர் எடப்பாடிக்கு நிபந்தனை வைத்துள்ளார். இந்த நிபந்தனையை ஏற்றால் அ.தி.மு.க.வுடன் இணைய தானும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தயார் என்று அறிவித்துள்ளார்.

sasikala angry speech against her family members

தினகரனும் மாதத்திற்கு ஒருமுறை பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து வருகிறார். அவருடைய ஆலோசனையின்படியே அரசியலில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறி வருகிறார்.

sasikala angry speech against her family members

இந்நிலையில், தினகரனின் தம்பி பாஸ்கரனும் அரசியலில் ஈடுபட்டு வருகிற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதேபோல் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா தானும் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே அவர் தொண்டு நிறவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

sasikala angry speech against her family members

சசிகலாவின் தம்பி திவாகரன் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை ஆனாலும் அவர் தினகரனுக்கு ஆதரவாக  கருத்துக்களை கூறி வருகிறார். இது போதாதென்று, திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் அரசியல் சார்பற்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். சில நேரங்களில் அரசியல் கருத்துக்களை கூறுகிறார்.

sasikala angry speech against her family members

இதனையடுத்து சசிகலாவில் கணவர் நடராஜன் அரசியலில் நேரடியாக தலையிடவிலலை ஆனால் தொலைக்காட்சி வார இதழுக்கு பேட்டியளித்து வருகிறார். முதல்- அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தான் எழுதிக் கொடுத்ததை அவர் படித்ததாகவும் தான் சொன்னபடி அவர் நடந்து கொண்டதாகவும் சர்ச்சையை கிளப்பினார். அதேபோல தினகரனுக்கு எதிராக பேசிய இளவரசியின் மகளை கன்னத்தில் அறிவேன் என பேசி சர்ச்சையாகவே திரிகிறார்.

sasikala angry speech against her family members

சசிகலா குடும்பத்தில் உள்ளவர்கள் சர்ச்சையாக அரசியல் கருத்துக்களை பெசிவருவதற்கும் கண்டித்து வைக்காமல் சசிகலாவின் கணவரும், சகோதரரும் அவர்களுக்கு ஆதரவாக இப்படி சர்ச்சையாக பேசி வருவதற்கு அதிமுகவிலிருந்து கண்டனக் குரல் எழுந்து வருகிறது.

sasikala angry speech against her family members

இதனையடுத்து, கடந்த சில தினகளுக்கு முன்பு மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் சசிகலாவை பரப்பன அகரகுஆராவில் சந்தித்தி பேசியிருந்தார். அப்போது ரொம்பவே வேதனையாகப் பேசியிருக்கிறார்.  இப்படி தனது உறவினர்கள் அரசியல் கருத்துக்களை கூறி அரசியலில் ஈடுபடுவது சசிகலாவுக்கு மனஉளைச்சலில் இருக்கிறாராம். இதற்குமுன் இவரை பார்க்கவரும் வக்கீல்களிடம் இதுகுறித்து கூறி அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே தான் நேரடி அரசியலில் ஈடுபட்டதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதை உறவினர்கள் எண்ணிப்பார்க்கவேண்டும் என கொதித்திருக்கிறார். ஆனாலும் சசிகலாவின் குடும்பத்தினர் யாரும் சசிகலாவின் பேச்சி கேட்டு அமைதியாக இருப்பதாக இல்லை...

Follow Us:
Download App:
  • android
  • ios