Asianet News TamilAsianet News Tamil

உலக அழகி சில்லரை கலாய்த்து மாட்டிக் கொண்ட சசி தரூர் !! டுவிட்டரில் மன்னிப்புக் கேட்டார் !!!

sasi tharoor twitter
sasi tharoor twitter
Author
First Published Nov 21, 2017, 9:40 AM IST


உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லரை, சில்லறை நாணயங்களுடன் ஒப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

அரியானா மாநிலத்தை சேர்ந்த மனுஷி சில்லர் , இந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது பெற்றோர் இருவரும் டாக்டர்கள். டெல்லியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் சோன்பேட் நகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

sasi tharoor twitter

இந்திய அழகி பட்டம் வென்றதை தொடர்ந்து, உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இந்நிலையில், சீனாவின் சானியா நகரில் நடந்த, 2017ம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் மனுஷி சில்லர் உலக அழகி பட்டத்தை வென்றார்.

sasi tharoor twitter

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில்  ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்றும் . சர்வதேச அளவில் இந்திய பணத்திற்கு மதிப்பு உள்ளது. அதனால் தான் சில்லர்கூட உலக அழகியாகிவிட்டது எனப் பதிவிட்டிருந்தார். அதாவது ஹிந்தியில் சில்லர் என்றால் சில்லறை என்ற அர்த்தம் வரும் வகையில் கூறியிருந்தார்.

இதற்கு தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். 

:இந்நிலையில் தனது செயலுக்காக  சசிதரூர் மன்னிப்பு கேட்டுள்ளார். ‛சில்லர் குறித்து தான் விளையாட்டாக கருத்து கூறியதாகவும், யார் மனதேனும் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்' அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios