உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து 4 ஆண்டு சிறை 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் சசிகலாவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.
4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு 10 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்பட்டுள்ளதால் சசிகலா இனி முதல்வராக முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா. பின்னர் திடீரென்று தானே முதல்வர் என்று அறிவித்து முதல்வராக தன்னை தேர்வு செய்யும் வேலையில் இறங்கினார்.
இதனால் ஓபிஎஸ் ப்பொர்க்கொடி தூக்கினார். தனக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு உண்டு என்று சசிகலா உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் முடிவெடுக்காமல் காலந்தாழ்த்தினார். இந்நிலையில் இன்று வந்த தீர்ப்பினால் சசிகலாவின் வாய்ப்பு முற்றிலும் பறி போனது. இனி அவர் முதல்வர் பதவியை நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு தீர்ப்பு வெளிவந்துள்ளது.
