Asianet News TamilAsianet News Tamil

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி வெற்றிக்கு எதிராக சென்ற சரிதாநாயருக்கு ஆப்பு..! கேரளஉயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

வயநாடு தேர்தலில் ராகுல் காந்தி வெற்றிக்கு எதிராக சரிதா நாயரின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்.
 
Sarithanayar wedged against Rahul Gandhi's Wayanad constituency victory ..! Kerala High Court verdict!
Author
Kerala, First Published Nov 3, 2020, 8:18 AM IST

வயநாடு தேர்தலில் ராகுல் காந்தி வெற்றிக்கு எதிராக சரிதா நாயரின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்.

கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்..

Sarithanayar wedged against Rahul Gandhi's Wayanad constituency victory ..! Kerala High Court verdict!

இவர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்ததால், சரிதா நாயர், நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.  வேட்பு மனு பரிசீலனையின் போது அந்த இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தியின் வெற்றிக்கு எதிராகவும் சரிதா நாயர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் புகார் மனுவாகத்தான் தெரிவிக்க வேண்டும் என்று கூறி கேரள ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து கேரள ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சரிதா நாயர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது.

Sarithanayar wedged against Rahul Gandhi's Wayanad constituency victory ..! Kerala High Court verdict!

 'இந்த மனு தொடர்பாக இருமுறை காணொலி விசாரணையில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், யாரும் பங்கேற்காததால், வயநாடு தேர்தலில்     ராகுல் காந்தி வெற்றிக்கு எதிராக சரிதா நாயரின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்'.
 
Follow Us:
Download App:
  • android
  • ios