விஜயகாந்துடன் கூட்டணி வைக்க ஓகே சொன்ன சரத்குமார்..! சூடு பிடிக்கும் அரசியல் விமர்சனம்..! 

தேவைப்பட்டால் விஜயகாந்துடன் கூட்டணி வைத்துக் கொள்வேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

வரும் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் திமுக மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் இந்த சமயத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கொடநாடு விவகாரத்தில், முதலமைச்சர் தன் மீது குற்றம் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தை விசாரிக்க தனிப்பட்ட ஒரு கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆட்சிமன்றக்குழு தீர்மானித்தால் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

அப்போது தேவைப்பட்டால் தேமுதிகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி வைக்கும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார். சரத்குமாரின் இந்த அதிரடி அறிவிப்பால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.