முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் முற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக பரபரப்பான அரசியல் சூழ்நிலை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சசிகலா தரப்பில் இருந்து ஒவ்வொருவராக பன்னீர் செல்வம் அணிக்கு தாவி வருகின்றனர்.
ஒரு அமைச்சர் 3 எம்.பிக்கள், 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட முழுவதிலும் இருந்து காட்சிகாரர்கள் ஆதரவு என ஓ.பி.எஸ் வீடு கலை கட்டி வருகிறது.
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை அவிழ்த்து விட்டால் பெரும்பான்மையான ஆதரவு ஓ.பி.எஸ்க்கு நேரடியாக வந்து சேரும் என ஓ.பி.எஸ் தரப்பில் கூறுகின்றனர்.
இந்நிலையில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ மக்கள் விருப்பபடி முடிவெடுப்பேன் என குழப்பத்தில் உள்ளார்.
இதையடுத்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் திருச்சந்தூரில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலா அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
இதையடுத்து தன் மனைவி ராதிகாவுடன் சென்று சசிகலாவை சந்தித்து உரையாடினார்.
அவர் பொதுச்செயலாளர் ஆனதற்கு வாழ்த்து கடிதமும் அனுப்பினார்.
இந்நிலையில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய கட்டயபடுத்த பட்டிருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் முற்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
