தமிழகத்தில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை  அமைச்சர்   விஜய  பாஸ்கர், சமத்துவ  மக்கள்  கட்சித்தலைவர்  சரத் குமார்  உள்ளிட்டோர்  வீடு மற்றும்  அவர்களுக்கு  சொந்தமான அலுவலங்களில்  சோதனை  நடைபெற்று  வருகிறது .

இது குறித்து கருத்து தெரிவித்த, சரத் குமார், வருமானவரித்துறையினரின் இந்த  சோதனைக்கு பின்  ஏதோ சதி உள்ளது என்றும் , அரசியல்  காழ்புணர்ச்சியால் தான் இந்த  சோதனை  நடத்தப்படுவதாகவும், அதிமுக அம்மா  வேட்பாளர்  டி டி வி  தினகரனுக்கு  ஆதரவு தருவதை  தடுக்கவே இந்த  சோதனை   செய்வதாகவும்,  தங்கள் வேட்பாளருக்கு  ஆதரவு  தெரிவிப்பதை  தடுக்கும்  அதிகாரம்  யாருக்கும் அதிகாரிகளுக்கு  இல்லை  எனவும்  குறிப்பிட்டார் .

மேலும், தேவைப்பட்டால் குறுக்கு விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார் . மேலும்  ஜி.கே வாசன், ஒ பி எஸ்  அவர்களை சந்தித்தாரே.. ஏன்  அவர் வீட்டிலும்  சோதனை  செய்து இருக்கலாமே  எனவும்  கேள்வி  எழுப்பினார்  சரத் குமார்.